Kanyakumari

News March 26, 2024

விஜய் வசந்த் நாளை வேட்புமனு தாக்கல்

image

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் நாளை
(27.03.24) காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். இதில் காங்கிரஸ் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

News March 26, 2024

சாமிதோப்பில் நெல்லை பிஜேபி வேட்பாளர்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள புகழ்மிக்க அய்யாவழி இயக்கத்தின் தலைமைபதியான சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமிபதியில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் மற்றும் பாஜகவினர் வந்திருந்தனர்.

News March 26, 2024

குமரி வேட்பாளர்களின் சொத்து விவரம்

image

குமரி மக்களவை தொகுதியில் நேற்று(மார்ச் 25) வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் சொத்து விவரம். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.7.60 கோடி; அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.8.10 கோடி, மனைவி பெயரில்-ரூ.1.04 கோடி; நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரின் அசையும், அசையா சொத்துகள்- ரூ.4.50 கோடி, கணவர் பெயரில் – ரூ.1.14 கோடி.

News March 25, 2024

விளவங்கோடு அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக ராணி அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண் தங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

குமரி: அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாநில அதிமுக  மீனவரணி செயலாளர் பசலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

குமரி அருகே விபத்து: ஒருவர் பலி

image

குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த பொட்டல் விலக்கு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (61) .இவர் நேற்று மாலை தனது பைக்கில் பொருட்கள் வாங்குவதற்காக அத்தி கடைக்கு சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2024

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்., சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிடுவதாக சன்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் சேவகி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

விளவங்கோடு தொகுதியில் இந்து மகா சபா வேட்பாளர்

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். எனவே விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஓம் பிரகாஷ் என்பவரை வேட்பாளராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

News March 25, 2024

குமரி: பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று எம்.ஆர் காந்தி  மற்றும் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.