India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகியமண்டபம் சந்திப்பில் இன்று(மார்ச் 28) காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குமரி மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜய் வசந்த் எம்பி போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சியினருடன் கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் விஜய் வசந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த செல்லசாமி காங்கிரஸ் சட்டக் சபை கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்த வகையில் விளவங்கோடு சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வி எஸ் நந்தினி விளவங்கோடு தேர்தல் பொறுப்பாளரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குளச்சல் அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) தனுஷ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தை ஆகாஷ், தனுஷ் ஆகியோர் கம்பி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணவாளகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குமரி மக்களவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோட்டார், பறக்கை ஜங்ஷனில் தொடங்கி இளங்கடை, வெள்ளடிச்சி விளையில் பேரணி நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.