Kanyakumari

News December 15, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

இன்று (டிச.15) காலை 10 மணி ஆலன்விலை பங்கு பேரவை சார்பில் ஆளன் அன்னைநிதி நிதி நிறுவனத்தில் பணத்தை திருப்பி கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் சார்பில் பாலன்விளை படிப்பகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  மாலை 4 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News December 15, 2024

குமரி மக்கள் நீதிமன்றத்தில் 1,644 வழக்குகளுக்கு தீர்வு 

image

நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல்,குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று (டிச.14) நடைபெற்றது. இதில் 2231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 1644 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.13,55,35,356 வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒட்ஜொ; நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர், எதிர்மனுதார் பங்கேற்றனர்.

News December 14, 2024

கட்சிக்குடா ரயில் 4 மணி நேரம் தாமதமாக செல்லும்

image

கட்சிக்குடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் கட்சிக்குடா நாகர்கோவில் ரயில் 4 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக டிச.14 நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கட்சிக்குடா புறப்பட்டு செல்லும் ரயில் 3 முதல் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

News December 14, 2024

தேமுதிக சமூக வலைதள பொறுப்பாளர் நியமனம்

image

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,விருதுநகர், ராமநாதபுரம்,தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம் 11 ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சமூக வலைதள அணி தென்மண்டல பொறுப்பாளராக குமரி மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க சமூக வலைதள அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.

News December 14, 2024

மது வாங்கி கொடுக்காததால் நண்பரை கொன்ற வாலிபர்

image

குமரி, மேல சூரங்குடியை சேர்ந்தவர் பிரவீன், கடந்த 11ம் தேதி கோணம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பிரவீனை கொலை செய்ததாக அவரது நண்பர் கார்த்திக் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் மது வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 14, 2024

அணைகளின் நீர்வரத்தை கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு 1, சிற்றாறு 2, மாம்பழத்துறையாறு மற்றும் பொய்கை அணைகள் உள்ளது. தற்போது மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அணைகளுக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து அதற்கு தேவையான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 14, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை நாள் கூட்டம் வருகின்ற டிச.19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும். விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று(டிசம்பர் 14) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அதி கனமழை, மிக கனமழை என தொடர்ந்து பெய்து பல நீர்தேக்க பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT.

News December 14, 2024

நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

image

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீர் புரஸ்கார் விருது’க்கு குமரி மாவட்டத்திலிருந்து தகுதியுடையோர் நாளைக்குள்(டிச.,15) awards.tn.gov.in வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். விருது 2025 ஜனவரி 26 குடியரசு தின விழாவின்போது வழங்கப்படும். கூடுதல் தகவல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

குமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்ட கல்லூரிகளும் இந்த பல்கலை.யில் இணைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. *உங்கள் பகுதி கல்லூரி மாணவர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!