Kanchipuram

News November 8, 2024

உணவு தேவைக்கு அரிசி மூட்டைகள்: தயார்

image

காஞ்சிபுரம், முத்தியால்பேட்டையில் அங்காடி உள்ளிட்டவற்றை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். அதன்பின், “தமிழகத்தில் அரிசி கடத்தலில் மொத்தம் 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 74 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மழைக்காலத்தில் உணவுத் தேவைக்காக 5 கிலோ அரிசி மூட்டைகள் மொத்தம் 3 லட்சம் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

News November 8, 2024

திருவிழாவில் தகராறு செய்தவர்கள் சிறையில் அடைப்பு

image

உத்திரமேரூர், கிளக்காடி கிராமத்தில் கடந்த செப். 10ஆம் தேதி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது, பேண்ட் வாத்தியத்தில் பங்கேற்ற அப்பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. சாலவாக்கம் போலீசார் தினேஷ் (21), பிரேம்குமார் (20), யுவராஜ் (18), தீபக் (28), மகேஷ் (20), சதீஷ் (18), சசிகுமார் (21), சதீஷ் (17) ஆகிய 8 பேரை கைது செய்து நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News November 8, 2024

காஞ்சிபுரத்தில் 0.9 செ.மீ. மழை பதிவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக, ஸ்ரீபெரும்புதுாரில் 4.6 செ.மீ. மழை நேற்று மாலை 6 மணி வரை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 2.9 செ.மீ., மழையும், குன்றத்தூரில் 1.4 செ.மீ., மழையும், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாதில் 0.9 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

News November 8, 2024

பெண் காவலர் கொலை வழக்கு: CBCID-க்கு மாற்றம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் கஸ்துரி (62). ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், வளையாபதி, பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, டி.எஸ்.பி., நிலையில் உள்ள அதிகாரி விசாரணையை தொடங்கி உள்ளார்.

News November 8, 2024

192 பேருக்கு கடனுதவி வழங்கிய ராதாகிருஷ்ணன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பல்பொருள் அங்காடியை, கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மினி வேன், 4 பேருக்கு விற்பனையாளர் பணிக்குரிய பணி ஆணை, 194 நபர்களுக்கு 1.92 கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கினார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 8, 2024

3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

image

காஞ்சிபுரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஊரக வளர்ச்சி முகமைக்கும், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் கண்காணிப்பாளராகவும், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் முத்துசுந்தரம், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News November 8, 2024

சவிதா கல்லூரியில் மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அவதி

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்கால் கனமழை பெய்தது. இந்த கனமழையால், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், தற்காலிகமாக அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

News November 8, 2024

சென்னை-காஞ்சிபுரம் நேரடி பேருந்து வழங்க கோரிக்கை

image

காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பல்வேறு பகுதிக்கு நேரடியாக செல்ல பேருந்து வசதி இல்லாததால், தாம்பரம் அல்லது பூந்தமல்லி சென்று அங்கிருந்து சென்னை மாநகர் பேருந்து, ரயில், ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், நேரம், பணம் விரயமாகிறது. எனவே, பொதுநலன் கருதி, சென்னையில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு மாநகர் பேருந்து இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 8, 2024

அரசு பேருந்தில் உறங்கியவர் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை, வந்தவாசி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (58). இவர், செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் செங்கல்பட்டு – சித்தனக்காவூர் வரை இயங்கும் அரசு பேருந்தில் படுத்து தூங்கிய இவர், நேற்று அதிகாலை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

News November 8, 2024

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 10:30 மணி அளவில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களின் குறைபாடுகளை புகார் மனுக்களாக அளிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.