India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளன. எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் மற்றும் வினாடி வினா போட்டி வரும் டிச.20ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. அரசு ஊழியர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப் பேட்டை சின்னத்தெருவில் வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம் குறித்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, நேற்று (17.12.2024) ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி இருந்தார்.
காஞ்சியில் கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 16.12.2024க்கு பதிலாக 03.01.2025 முதல் 31.01.2025 வரை நடைபெற உள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியினை 03.01.2025 முதல் தவறாது போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், இன்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து காஞ்சிபுரம் ரயில் சேவையில் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிச.20ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். 1000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனக் கூறியுள்ள கலெக்டர் 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியை சுற்றியுள்ள ஏனாத்துார், சிறுகாவேரிப்பாக்கம், புத்தேரி, கருப்படித்தட்டடை உள்ளிட்ட 11 ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்தது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வராத நிலையில், சுற்றியுள்ள 11 ஊராட்சியின் தலைவர்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Audiometrician, இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட தகுதி உள்ள நபர்கள் https://kancheepuram.nic.in/இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து டிசம்பர்.31க்குள் காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு அனுப்பலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 20ல், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காலை 10:30 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள், விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.