India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று. தெய்வீகமான இந்த மாமரத்தை சுற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாமரத்தில் மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த மாமரத்தில் எப்படி மாங்காய்கள் காய்க்கும் என ஆச்சரியத்துடன் பார்த்தபடி, பக்தர்கள் மரத்தை சுற்றிவந்து வழிபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) ஒருங்கிணைந்த பயிற்சியுடன் கூடிய பிஇ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு இணையதளத்தை பயன்படுத்தி இன்றுமுதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார்.இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு <
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் District Early Intervention Centre (DEIC) திட்டத்திற்கான பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 40 வயதுக்கு உட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் 10ஆம் தேதிக்குள் இந்த <
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (43). இவர், தனது காரில் தந்தை கோபாலகிருஷ்ணன் (79) உட்பட 4 பேருடன் ஊட்டிக்கு சென்றுவிட்டு நேற்று (ஏப்ரல் 1) காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சேதுராமனை (26) விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் புதியதாக 4 சுற்றுலா மாளிகைகள் ரூ.21.90 கோடியில் கட்டப்படும். கல்வராயன் மலை, ஏற்காடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் புதியதாக 3 ஆய்வு மாளிகைகள் ரூ.9.50 கோடியில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
அடுத்த 5 ஆண்டுகளில் 50 புதிய விமான நிலையங்கள் நிறுவப்பட உள்ளன; உடான் திட்டத்தின் கீழ் 2026 முதல் 2036 வரை 126 புதிய இடங்கள் உருவாக்கப்பட உள்ளன, மேலும் பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையங்கள் தேவை; சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது என மாநிலங்களவையில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு உள்ள பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
பரந்துார் விமான நிலைய இடத்தேர்வுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, திட்ட அனுமதிக்கு டிட்கோ விண்ணப்பம் செய்தது. இதை பரிசீலித்து வந்த மத்திய அரசு, இந்த வாரத்தில் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும். நிலம் தந்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.