India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 23ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஊழியர் கௌரவிப்பு, மகளிர் சுயஉதவிக் குழு கௌரவிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, தூய்மை பாரதம், மகாத்மா காந்தி வேலை திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 15.11.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 1000+ காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் (முன் அனுபவம் பெற்றவர்களும்) நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். 18-35 வயதினர் கல்வி சான்றிதழ், புகைப்படத்துடன் காலை 9.30 மணிக்கு வருக. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல்.
பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று way2newsஇல் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தற்போது ராமானுஜர் வளைவு அருகில் செல்லும் வழி தடை செய்யப்பட்டு, அதற்கு பதிலாக சிவன்தாங்கல் நெமிலி சாலை எதிரில் புதிய வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் குறித்த தகவலை, போக்குவரத்து காவலர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று (11.11.2024) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் எஸ்.எஸ்.கே.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பேரிடர் காலங்களில் செயல்படும் முதல்நிலை பொறுப்பாளர்களின் பணியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.காந்தி, பேரிடர் பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.பி. க.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பின்ஷிப் போட்டியில், காஞ்சிபுரம் மாவ்ட்ட ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 40 நபர்கள் கலந்து கொண்டனர். இதில், 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 8 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 14 வயதுக்கு உட்பட்ட அணியினர் வெள்ளி பதக்கமும், பெண்கள் பிரிவு தங்கப் பதக்கமும் என ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் காஞ்சி மாவட்ட வீரர்கள் வென்று அசத்தினர்.
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என விஷம பிரசாரங்களை சில அமைப்புகள் எடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற மாட்டேன் என ஒருபோதும் முதலமைச்சர் கூறியதில்லை என்றும் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நவ.13ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில், பி.பார்ம்., பட்டம் மற்றும் டி.பார்ம்., பட்டய ஆகிய மருத்துவ சான்று பெற்றவர்கள், நவ.20ம் தேதி வரையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு, 3 லட்ச ரூபாய் அரசு மானியம் இரு தவணைகளாக ரொக்கம் மற்றும் மருந்துகளாக வழங்கப்படும் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.