India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானப் படையால் “அக்னிவீர்“வாயு தேர்வுகள் இணையவழியில் 22.03.2025 முதல் நடைபெற உள்ளது. இதில். கலந்துகொள்ள ஜன.27ஆம் தேதி வரை <
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடியரசு ஒத்திகையில் காவல்துறை சார்பில் அனைவரும் நிகழ்ச்சி ஒத்திகை 2ஆம் நாளாக இன்று நடைபெற்றது. குடியரசு தின விழாவில் பல்வேறு அரசியல் துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைகளுக்கும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
ஏனாத்தூரில் உள்ள கால்நடைத்துறை விவசாயிகள் பயிற்சி மையத்தில் நாளை (ஜனவரி 23) வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் முயல் வளர்ப்பு, முயல் வகைகள், நோய் தடுப்பு, பராமரிப்பு பணிகள், வளர்ப்பு உபகரணங்கள், தீவனம் பற்றி இலவசமாக கால்நடைத்துறை பயிற்சி மைய இயக்குனர் டாக்டர் பிரேம வள்ளி அவர்கள் பயிற்சியும் ஆலோசனைகளும் அளிக்க உள்ளார். விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமை வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது, கோபுரத்தில் உலக அமைதிக்கான நான்கு சிலைகளில் ஒரு சிலையின் அமைப்பு என, வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமி, கடந்த 2019 ஏப்ரல் 25ல், தெருவில் விளையாடினார். அப்போது, காஞ்சிபுரம், ஏனாத்துார் பகுதியைச் சேர்ந்த முருகன், 39, என்பவர், தன் வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கைபேசியால் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்தார். மேலும் ஆதிதிராவிடர், சிறுவிவசாயிகள் உள்ளிட்டோர் 50% மானியத்தில் ரூ.7,000/- வரை பெறலாம். இது தொடர்பாக விவசாயிகள் விவரங்களுக்கு 9443483010 அல்லது 9444073322 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது விமான நிலைய செயல்பாடுகளுக்கு தடைகள் பரந்தூரில் குறைவாக உள்ளன எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் பரந்தூர் விமான நிலைய திட்டம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மொத்தம் 283 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காஞ்சிபுரத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. தனியாா் நிறுவனங்கள் பல கலந்து கொண்டு, 1,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஆட்களை தோ்வு செய்யவுள்ளன. 10, 12ஆம் வகுப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் பலரை தோ்வு செய்ய உள்ளனர். 18 – 35 வயது உடையவா்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.