India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில், நேற்று போலீசார் நடத்திய வாகனச் சோதனையின்போது சரித்திர பதிவேடு குற்றவாளிகளான லெனின்(36), நரேஷ்பாபு(29), பரத்(28) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இதில், தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லெனின் மீது 6 கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, பெரம்பலூர், கடலூர், அரியலூர், கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கள ஆய்வு செய்துவரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 29ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அனைத்து துறை அதிகாரியுடன் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
தமிழகத்தில் மதுக்கடைகளை கணினி மயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தும் கண்காணிக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வரும் வியாழக்கிழமை முதல் விற்கப்படும் மதுபானங்களுக்கு பில் அளிக்க டாஸ்மார்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், பரந்தூர், தேனாம்பாக்கம், அய்யம்பேட்டை, படப்பை, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத ஏகாதசி ஒட்டி உற்சவரான ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவாபரணங்கள் அணிந்து கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக முன்னோடி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் கோதண்டம். அவரது மறைவுச் செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். மறைந்த கோதண்டத்தின் குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் ஆறுதல் என்று தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டப்பேரவை திமுக உறுப்பினராக இருந்தவர் ஏ.கோதண்டம்(99) கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இன்று முற்பகல் அவர் உயிரிழந்தார். திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக குன்றத்தூர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரின் மகன் தற்போது குன்றத்தூர் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர்.12) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதுவரை வடகிழக்கு பருவமழை 1% குறைவாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 52 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கல் உடைக்கும் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் புகையானது காற்று மாசு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களில் பதில் அளிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.