Kanchipuram

News March 14, 2025

தனிநபர் வருமானத்தில் காஞ்சிபுரம் இரண்டாம் இடம்

image

தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று(மார்.13)  வெளியிட்டார். இதில் கடந்த 2024 – 25ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதன்மையானதாக செங்கல்பட்டு மாவட்டம் தனி நபர் வருமானத்தில் 6,47,962 ரூபாயில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 6,47,474 ரூபாய்; சென்னை மாவட்டம் 5,19,941 ரூபாய் என முறையே 2,3 இடத்தை பிடித்துள்ளது

News March 14, 2025

பட்ஜெட்: தோழி’ மகளிர் விடுதிகள் கட்டப்படும்

image

2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தோழி’ மகளிர் விடுதிகள் கட்டப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்கள் பயன் அடைவார்கள்.

News March 14, 2025

ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோவை நீட்டிக்க ரூ.8779 கோடி ஒதுக்கீடு

image

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில், சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்தாண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9335 கோடி ஒதுக்கீடும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி

image

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

News March 14, 2025

காஞ்சிபுரத்தில் கிராம சபைக் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, வரும் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதிக்கப்படும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

News March 14, 2025

மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு 

image

ஸ்ரீபெரும்புதுார், மேவலுார்குப்பத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் நேற்று (மார்.13) காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. போலீசார் விசாரணையில், இறந்தவர் பீகாரைச் சேர்ந்த புல்லட் மஞ்சி (27) என்பதும், குளக்கரை தெருவில் வாடகைக்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் (மார்.12) இரவு குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் குளத்தில் தவறி விழுந்தது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

News March 13, 2025

தோஷங்கள் நீங்கும் அற்புத கோவில்கள்

image

காஞ்சிபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வாலீஸ்வரர் கோயிலில் வழிபட்டால் குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 13, 2025

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் – 23 கிராம சபைக் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 23.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை குறித்து விவாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <>வழங்கப்படும்<<>>. 15ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!