Kanchipuram

News November 14, 2024

ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் தின பேரணி 

image

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில், இன்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. “பெண்கள் கல்வி ஆகாயத்தின் வெளிச்சம். நாங்கள் குழந்தை திருமணத்தை ஆதரிக்க மாட்டோம். குழந்தைகளுக்கான உரிமையை நாம் உறுதிப்படுத்திடுவோம்” உள்ளிட்ட வாசகப் பலகை கைகளில் ஏந்தியபடி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ஆட்சியர் பேரணியை தொடங்கி வைத்தார்.

News November 14, 2024

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (நவ.15) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வினை நடத்த உள்ளனா். 8, 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், ஐடிஐ படித்தவா்கள் தோ்வு செய்யவுள்ளனா். மேலும் விவரங்களுக்கு, 044-27237124

News November 14, 2024

குழந்தைகள் தின நடைப்பயணப் பேரணி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைப்பயணப் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை, மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைக்க உள்ளார்கள். இதில், துறை சார்ந்த அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

News November 14, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று (நவ.14) காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், மழை காரணமாக சாலைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்லுங்கள்.

News November 14, 2024

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் பில் வழங்கும் முறை அமல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ.14) முதல் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு ₹294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டது. இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க

News November 14, 2024

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை

image

குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் கிருஷ்ணா கார்டன் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதி ஆட்கள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் 4 வீட்டில் இருந்த 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றார். வெளியூர் சென்று வீட்டிற்கு வந்த வீட்டின் உரிமையாளர்கள் இந்த திருட்டுச் சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து திருடர்களை தேடி வருகின்றனர்.

News November 14, 2024

மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணி

image

விச்சந்தாங்கலில் இன்று (13.11.2024) மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரா.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News November 13, 2024

சிமெண்ட் கலவையில் விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

image

ஸ்ரீபெரும்புதூர், திருமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (42). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் மாலை மது போதையில் வீட்டின் அருகே, சிமென்ட் சாலையோரம் படுத்திருந்தார். அப்போது, மது போதையில் அருகே உள்ள சிமென்ட் கால்வாயில் விழுந்தார். ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News November 13, 2024

1.26 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகள் இருப்பதாகக் கூறி 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள், தாலுகா அலுவலகங்களுக்கு தபால் வாயிலாகவோ அல்லது நேரிலோ சென்று விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.24ஆம் தேதிக்குள், 2இல் ஒரு பெயரை நீக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

News November 13, 2024

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

image

காஞ்சிபுரத்தில், நேற்று போலீசார் நடத்திய வாகனச் சோதனையின்போது சரித்திர பதிவேடு குற்றவாளிகளான லெனின்(36), நரேஷ்பாபு(29), பரத்(28) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இதில், தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லெனின் மீது 6 கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.