India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் – திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் (28 மார்) வெள்ளிக்கிழமை மண்டல பூஜைகள் நடைபெற்று பங்குனி மாத வெள்ளிக்கிழமை தாயாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி மலர் அலங்காரங்கள் அர்ச்சனைகள் தீபா ஆராதனை நிகழ்வை தொடர்ந்து பிரசாதங்கள் வழங்க சுற்றுலா வாசிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1.அகரம்தூளி கிராமம் இளங்காளியம்மன் கோயில்,
2.குன்றத்தூர் மாரியம்மன் கோயில்,
3.பருக்கல் பொன்னியம்மன் கோயில்,
4.சாலூர் எல்லையம்மன் கோயில்,
5.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்,
6.நெடுமரம் முத்தாலம்மன் கோயில். அம்மன் பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க
பரந்துாரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதால், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் பெர்ரி முதல்வருக்கு நேற்று (மார்.27) மனு அனுப்பினார்.
பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு <
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்.28) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். டிப்ளமோ, ஐ.டி.ஐ, 10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 044-27237124. ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு, பொய்யா குளம், நாகலத்து மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தப் பகுதியில் குற்றவாளிகள் தங்கி இருப்பார்கள் என பட்டியல் எடுத்து, அந்தப் பகுதிக்கு போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருது நிம்மதியை தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செரப்பணஞ்சேரி அருகே ஸ்ரீ விமீஸ்வரர் சிவாலயத்தில் இன்று (மார்.,27) குருபிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கும் மூலவர் விமீஸ்வரருக்கும் பலவித அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடத்தி பக்தர்கள் அனைவரும் வழிபட்டனர். பின், நந்தி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி அறுகம்புல் மாலை சாற்றி வழிபட்டனர். மேலும், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்
படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலமங்கலம் நடுநிலைப்பள்ளியில் GKN நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட STEM LAB யை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் மாணவ மாணவிகளின் பெட்ரோல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்
படப்பை ஊராட்சி மேட்டு தெருவில் உள்ள அங்கன்வாடியில் சங்கரா கண் மருத்துவமனை மூலம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் என்று நடைபெற்றது ஒன்றி குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் படப்பை ஊராட்சி பொதுமக்கள் பலர் பயன்பட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களது பகுதியில் உள்ள நிறைகுறைகள் மற்றும் மக்கள் பிரச்சினை குறித்து விவாதம் மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.