Kanchipuram

News November 15, 2024

காஞ்சிபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தென் தமிழகம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (நவ.15) காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.

News November 15, 2024

மின்சாரம் பாய்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

மாங்காடு, சீனிவாசா நகரில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற, மின் மோட்டார் அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே கடந்த 2ஆம் தேதி சென்ற சாந்தி என்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற சென்ற சசிகலா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாந்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சசிகலா வீடு திரும்பினார்.

News November 15, 2024

சனிக்கிழமைகளில் மட்டும் திடுடிய நபர் கைது 

image

குன்றத்தூர் மாங்காடு சுற்றுப்புறங்களில் சனிக்கிழமை நாட்களில் மட்டும் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு(33) என்பது தெரியவந்தது. இவர் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய 22 சவரன் நகையை மாங்காடு போலீசார் மீட்டனர்.

News November 15, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் காஞ்சிபுரத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News November 15, 2024

நிலத்துக்கு அரசு வழங்கும் மிதிப்பு குறைவு: குமுறும் மக்கள்

image

வளத்தூர் கிராமத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு அரசு அளிக்கும் மதிப்பை நிலம் உரிமையாளரிடம் விமான நிலையத் திட்ட நிலமெடுப்பு அதிகாரிகள் தெரியப்படுத்தி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட உள்ள கிராமங்களில், நிலங்களின் உரிமையாளர்களிடம் அரசு வழங்கப்பட உள்ள நிலத்திற்கான மதிப்பு மிகவும் குறைவு என கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

News November 15, 2024

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நேற்று (14.11.2024) வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025க்கான அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜி.பிரகாஷ், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

குன்றத்தூரில் எலி மருந்தின் நெடி பரவி மகன், மகள் உயிரிழப்பு

image

குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன்(34), வீட்டில் எலி தொல்லை இருந்ததால், எலி மருந்து பயன்படுத்தியுள்ளார். வீட்டில், எலி மருந்தின் நெடி பரவி, கிரிதரனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிதரனின் மகன், மகள் உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

News November 14, 2024

குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (14.11.2024) தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 14, 2024

நவ.15இல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 5  ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு, செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்வது வழக்கம். தற்போது கீழ்கதிர்பூர் உள்ளிட்ட 13 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நடைபெறுகிறது. இதற்கு, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (நவ.15) நடைபெற உள்ளது.

News November 14, 2024

டாஸ்மாக் கடையில் பில்லிங் முறை தள்ளிவைப்பு

image

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட இருந்த டிஜிட்டல் முறை மதுபான விற்பனை, தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பழைய மதுபானங்கள் விற்றுத் தீர்ந்த பின், நாளை முதல் புதிய டிஜிட்டல் முறையை தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.