India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி, ரவுடி வசூல் ராஜா 34, என்பவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட சுரேஷ்(19) மற்றும் ஜாகீர்உசேன்(25) ஆகிய இருவரையும், எஸ்.பி.,சண்முகம், பரிந்துரை படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவித்தது. காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, இரண்டு பிர்கா உருவாக்க, வருவாய் துறையினர், கருத்துரு அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பிர்காவை பிரிக்க வருவாய் துறையினர் நீண்ட நாட்களாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள்தொகை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம், சமூக நலத்திட்டங்கள் பற்றி விரிவாக தெரியவேண்டுமா?. அரசு உதவிகளை பெறும் வழிமுறைகள், விவசாய நிலங்கள், பயிர்கள், தொழில் வாய்ப்புகள், சுற்றுலா இடங்கள் போன்றவை பற்றியும் தெரியவேண்டுமா? அப்படியென்றால் <
பங்குனி மாத கடைசியான இன்று தோன்றும் பௌர்ணமி சைத்ர பூர்ணிமா எனப்படுகிறது. இன்றைய தினம் சித்ரகுப்தரை வணங்குவது வழக்கம். மேலும், இன்று அரசி, பால், தயிர், சங்கு, தண்ணீர், வெள்ளை ஆடை ஆகியவற்றை தானம் செய்தால் பல தோசங்கள் நீங்கி அதிஷ்டம் பெருகும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் உள்ள சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
ஒரகடம், வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர், 38. இவரது மகன் விஷ்வா(13), 8ஆம் வகுப்பு மாணவரான இவரைக் கடந்த 7 ம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள தெருநாய் வலது கையில் கடித்தது. ரெட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஷ்வாவிற்கு தீவிர தலைவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சியில் முதல்வரின் மாநில இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது வெல்பவர்களுக்கு , 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.inல், இணையதளம் வாயிலாக ஏப்ரல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மேலும், விபரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
▶மாவட்ட ஆட்சியர் – 044-27237433, ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 044-27237424, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 044-27237945, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413, ▶மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் – 044-27237153, ▶காவல் கண்காணிப்பாளர் 044-27238001, ▶டிஐஜி – 04427239009, ▶மாவட்ட மின்வாரியம் – 9444371912, ▶மாநகராட்சி – 044-27223593, ▶விவசாய இணை இயக்குநர் – 044-27222977
படப்பை டேவிட் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (89). இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) இரவு படப்பை பஜார் பகுதியில் உள்ள வண்டலுார் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி, லட்சுமணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் லாரி ஓட்டுநர் அஷ்ரப் அலியை (30) கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணிக்கு (காஞ்சிபுரம்) கீழம்பி, (உத்திரமேரூர்) நெய்யாடுபாக்கம், (வாலாஜாபாத்) திருவங்கரணை, (ஸ்ரீபெரும்புதூர்) எறையூர், (குன்றத்தூர்) கரசங்கால் ஆகிய கிராமங்களில் நடைபெறும் பொதுவிநியோக குறைதீர் திட்ட முகாமில் ரேஷன் கார்டில் அனைத்து விதமான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை செய்து கொள்ளலாம். மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.