India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரகடம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (33), வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.
இன்று (14-4-25)காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 1181 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு 24.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தார்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் விஷ்வா (13). கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விஷ்வாவை தெரு நாய் கடித்தது. இதில் வலது கையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அதிகமான தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் விஷ்வா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட கூட்டமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-25ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 15-30 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் உள்ள ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
Sorry, no posts matched your criteria.