Kanchipuram

News April 18, 2024

வாக்குப்பெட்டி கொண்டு செல்ல வாகனங்கள் தயார்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் நேற்று(ஏப்.17) போலீசாரின் ரோந்து பணி மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. வாக்குப்பெட்டி வாகனங்களுடன் பாதுகாப்பும் அளிக்கும் வகையில் செல்ல ஏதுவாக, காவல்துறை வாகனங்களும் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

News April 17, 2024

ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் 6 மணியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் 6 மணிக்கு மேல் தேர்தல் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளுதல், பண பட்டுவாடா தடுத்தல் போன்ற விதிகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News April 17, 2024

காஞ்சியில் வாக்குப்பெட்டி கொண்டு செல்ல வாகனங்கள் தயார்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று  ஆட்சியர் வளாகத்துக்குள் தேர்தல் போலீஸ் ரோந்து பணிக்கு மற்றும் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்ல வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் வாகனங்களுடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்க காவல்துறை தயாரான நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

News April 17, 2024

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

image

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட கரசங்கால் பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

காஞ்சிபுரம்: வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு அன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல்.19 ஆம் தேதி வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

காஞ்சி: சித்திரை மாத திருவிழா துவக்கம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கச்சபேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் திங்கள் 22ஆம் தேதி அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.

News April 15, 2024

காஞ்சிபுரம் இன்று குலுங்குகிறது

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காஞ்சிபுரம் இன்று குலுங்குகிறது. அண்ணாவின் கனவை நிறைவேற்றுவோம் அதுதான் என்னுடைய கொள்கை மற்றும் லட்சியம். நெசவாளர்களுக்கு எதுவும் செய்யாத அரசு மத்திய அரசு. திமுக ஆட்சி வந்தாலே மின் விலை உயர்ந்துவிடும், கோடை காலங்களில் மின் விட்டு அதிகரிக்கும் என்றார்.

News April 15, 2024

அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!