Kanchipuram

News April 19, 2024

தேர்தலை புறக்கணித்த மக்கள்! போராடும் அலுவலர்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் பகுதி மக்கள், பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதை தொடர்ந்து, தேர்தலை புறக்கணித்த மக்களிடம் வீடு வீடாக சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 19, 2024

பரந்தூர்: வெறிச்சோடிய வாக்கு பதிவு மையம்

image

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராமங்களில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. ஏகனாம்புரம் கிராமத்தில் 9 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 வாக்குகளையும் அரசு அலுவலர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். நாகப்பட்டு கிராமத்தில் இதுவரை ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News April 19, 2024

காஞ்சிபுரம்: வரிசையில் நின்று வாக்களித்த கலெக்டர்

image

காஞ்சிபுரம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் இன்று மக்களவைத் தேர்தலை ஒட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

News April 19, 2024

காஞ்சி: முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கும் நிலையில், காலை 6 மணி முதல் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கட்சி முகவர் முன்னிலையில் அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு சோதனை நடைபெற்றது.

News April 18, 2024

ஒரே நாளில் ரூபாய் 12 கோடி ரூபாய் மது விற்பனை

image

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் எங்கும் அரசு மதுபான டாஸ்மார்க் கடையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூபாய் 12 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர். பிற நாட்களில் ஒரு நாளுக்கு ரூ.4 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2024

காஞ்சிபுரம்: பேருந்துக்காக அலைமோதிய கூட்டம்

image

நாளை (ஏப்ரல் 19 ) நாடாளுமன்ற தேர்தல் 2024 மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள், அலுவலகத்தில் பணிபுரிவோர், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தனர்.

News April 18, 2024

காஞ்சிபுரம்: பசுமை வாக்கு சாவடி மையம்

image

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பசுமை வழி வாக்கு சாவடி மையம் அமைக்க பள்ளி முழுவதும் வாழை மரம், தென்னங்குருத்து, பனை நுங்கு குருத்து, பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு வாக்கு சாவடி முழுவதும் பசுமையான நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. வாக்காளர்கள் பசுமை நிறைந்த வாக்குசாவடி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

News April 18, 2024

காவலர்களுக்கு காஞ்சிபுரம் எஸ்.பி அறிவுரை

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகம் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அறிவுரை வழங்கினார்.

News April 18, 2024

காஞ்சிபுரம் தொகுதி: உங்களுக்கு தெரியுமா இது!

image

2019 மக்களவைத் தேர்தலில், காஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் வெற்றிபெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 6,84,004 (55.3%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான தேவராஜன் 1,312 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

News April 18, 2024

நம்ம காஞ்சி: இது நம்ம ஏரியா

image

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம், 2009-ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 15-வது மக்களவைத் தேர்தலை காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும். இம்மக்களவைத் தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17,32,946 ஆகும்.

error: Content is protected !!