Kanchipuram

News April 17, 2025

சிறுசேரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 17) திறந்து வைக்க உள்ளார். சிறுசேரியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,882 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சுமார் 1,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

News April 17, 2025

டிராக்டர் – பைக் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

image

உத்திரமேரூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (45), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினரான எட்டியப்பன் உடன் செய்யாறு – பெருநகர் சாலை கீழ்நீர்குன்றம் கிராமம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் விநாயகம் உயிரிழந்தார். பைக்கை ஒட்டிச் சென்ற எட்டியப்பன் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 16, 2025

காஞ்சிபுரத்தில் அன்னம்மாள் கேட்டரிங் கல்லூரியில் மோசடி

image

அன்னம்மாள் கேட்டரிங் கல்லூரியில் கடந்த வாரம் HOD சாமுஸ்ரீ மற்றும் அலுவலர் சத்தியகலா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பயிலும் மாணவர்கள் கட்டணம் சரியாக செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதை கேட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் குவிந்து, HOD சாமுஸ்ரீ கட்டணத்தை வசூலித்து விட்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளித்துள்ளனர்.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 16, 2025

காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (ஏப்ரல்.17) காலை 11:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

News April 16, 2025

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: நடவடிக்கை தேவை

image

காஞ்சிபுரத்தில், ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, பல இடங்களில் தற்போது வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

News April 16, 2025

187 கிலோ குட்கா கடத்திய ராஜஸ்தான் இளைஞர் கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி பாலு செட்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சம ராதா(22) என்பவர் வாகனத்தை சோதனை செய்தபோது 187 கிலோ குட்கா இருந்தது தெரியவந்து. குட்காவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News April 16, 2025

மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

image

உத்திரமேரூர், ஓங்கூர் கிராமத்தில் உள்ள ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் 39 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு, சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சத்துணவு அமைப்பாளர் பாக்கியலட்சுமி, சமையலர் மேரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

News April 15, 2025

மாங்காய் பறிக்க சென்றவர் கீழே விழுந்தது உயிரிழப்பு

image

ஒரகடம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (33), வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 15, 2025

டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!