Kanchipuram

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

100 CCTV கேமராக்களை ஆய்வு செய்து கைது

image

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரையில் உள்ள 100க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து பல்லாவரம் பம்மல் பகுதியைச் சதாம் உசேன், சுரேஷ், பரிபாய்தீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 26, 2025

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

image

காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி அருகே கருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (23), சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய்(21) ஆகிய இருவரும் நேற்று தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்த நிலையில், போலீசார் ரோந்து பணியின் போது அவர்களை கைது செய்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News February 25, 2025

POST OFFICE JOB- விண்ணப்பித்தால் போதும் சூப்பர் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 25, 2025

சாம்சங் பிரச்சனை; பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் 17 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள்   சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று  நடைபெற்ற 7ஆம் கட்ட  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 24, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை- பாய்ந்தது குண்டாஸ்

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார், வாலாஜாபாத் தாலுகா புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (42) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த<> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க.

News February 23, 2025

போலீசுக்கு போக்குக்காட்டிய திருடர்கள் கைது

image

காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த 3 திருடர்களை 100க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து பணம், நகை, வாகனங்களைத் திருடி வந்த கும்பலிடமிருந்து, 25 சவரன் நகைகள், 1 வைர மோதிரம், 340 கிராம் வெள்ளிப் பொருட்கள், கார், ஆட்டோ, விலையுயர்ந்த இருசக்கர வாகனம் என 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News February 22, 2025

காஞ்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

image

காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.

error: Content is protected !!