India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்துார், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த பெஸ்ட் கன்ட்ரோலர் எனும் நிறுவனம் மூலம் வாங்கிய மருந்தில் வெளியேறிய நெடிகளால் அவரது மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். தற்போது கிரிதரன், அவரது மனைவி பவித்ரா சிகிச்சை பெறுகின்றனர். 3 இடங்கள் மட்டுமே வைக்க வேண்டிய மருந்தை 12 இடங்களில் வைத்ததால் இந்த துயரம் ஏற்பட்டது தெரியவந்தது.
வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள். படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்.
தமிழகத்தில் அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட, கூடுதல் விலைக்கு மது விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தடுக்க, கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவது முதல் கடையில் விற்பது வரை மது விற்பனையை முழுக் கணினி மயமாக்கும் திட்டத்தை டாஸ்மாக் செயல்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 210 கடைகளில் மது பாட்டிலை ‘ஸ்கேன்’ செய்து விற்கும் கணினிமய திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் Form-6 மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் செய்யலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடிகளிலும் இன்று முதல் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இரட்டை பதிவுகளை நீக்கலாம். பெயர் சேர்த்தல் (Form 6), இடமாற்றம் (Form 7), தொகுதி மாற்றம் மற்றும் அடையாள அட்டை நகல் (Form 8) ஆகியவற்றை பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் திருத்தங்களை செய்யலாம். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகம் சார்பில், வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை (நவ.17) கொளப்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெறும் இத்தேர்வில், கலந்து கொள்ளும் வீரர்கள் 20 வயதுக்கு உட்பட்டும் 70 கிலோவிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில கபடி போட்டியில் கலந்து கொள்வார்கள். வீரர்களின் கபடி குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.16) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன்படி, இருங்காட்டுக்கோட்டை, ஓரிக்கை, பிள்ளைப்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களின் கீழ் மின் விநியோகிக்கப்படும் கிராமங்கள் மற்றும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த அறிவிப்பை ஏற்று, சார்ஜ் போடுவது, சமையல் வேலைகளை முடிப்பது என தங்கள் வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ.15) முதல் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகள், செங்கல்பட்டில் உள்ள 89 கடைகள் என மொத்தம் 220 டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மது பாட்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும்.
தென் தமிழகம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (நவ.15) காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.