Kanchipuram

News October 17, 2024

அவசர காலங்களில் கால்நடை சேவையை பெறலாம்

image

பேரிடர் காலங்களில், ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 குழுக்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 63 குழுக்கள் என 108 கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான அவசர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அவசர கால தேவைகளுக்கு, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை அழைப்பு எண்ணை (1962) தொடர்பு கொண்டு ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை பெறலாம் என கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.

News October 17, 2024

தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மத்திய, மாநில அரசு திட்டங்களின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். காலையில், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து வளர்ச்சி பணிகளும் ஆய்வு செய்ய உள்ளனர் என ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

News October 17, 2024

இயல்பு நிலைக்கு மாறியது வானிலை மையம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர், மதுராநல்லூர், புளியம்பாக்கம், தேவரம்பாக்கம், ஊத்துக்காடு, சேர்க்காடு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில், நேற்று வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், காலை முதலே மழையின்றி வானம் பிரகாசமா இருக்கிறது. இதையடுத்து, மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிக்கு சென்றனர்.

News October 17, 2024

நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க முடிவு

image

காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீராக மாறக் கூடிய சூழல் எழுந்துள்ளது. இதனால், நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யவும் அறிவுறுத்தினர்.

News October 17, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்குறைதீர் கூட்டம்

image

மாதத்தின் 3ஆவது வியாழக்கிழமை என்பதால், காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் கூட்டம் இன்று (அக்.17) நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு இந்தக் கூட்டமானது நடைபெற உள்ளது. இதில், மின் நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 17, 2024

பலத்த மழையால் இதுவரை 43 பாம்புகள் பிடிபட்டன

image

பலத்த மழை காரணமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் தீ விபத்து தொடர்பான 16 அழைப்புகளும், உதவிகள் கேட்டு 74 அழைப்புகளும் நேற்று முன்தினம் தீயணைப்பு படையினருக்கு வந்தன. அதில், 43 அழைப்புகள் பாம்புகள் வீடுகளுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் 43 பாம்புகளை பிடித்தனர்.

News October 17, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாட்ட கலைச்செல்வி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை ஓரளவு மழை சீரானதால், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும். ஷேர் பண்ணுங்க

News October 17, 2024

பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்கள்

image

சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நேற்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, இன்று முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

image

வடகிழக்க பருவமழை தொடங்கி கடந்த இரு தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.

News October 16, 2024

ரெட் அலர்ட் இல்லை! வானிலை ஆய்வு மையம் தகவல்

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.