India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று காஞ்சிபரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பெற்ற வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் உள்நோயாளிகளிடம் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொதுவாக மருத்துவ ஆலோசனைக்காக காத்திருந்த முதியவரிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.கோபிநாத் இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறையில் 121 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் காந்திரோடு வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓரிக்கை வழியாக திருப்பிவிடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இந்த போக்குவரத்து மாற்றத்தினை காவல்துறையினர் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சரத்குமார் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அர்ச்சகர்கள், நடிகர் சரத்குமாருக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் ஆரத்தி செய்து சிறப்பித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ராஜாஜி மார்க்கெட் எதிரில் இன்று (28/4/24) தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மோர், தன்னீர் பழம், வெள்ளரிப்பழம், இளநீர் ஆகியவற்றை கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ரிஷப்(18), அபினேஷ்(23), மோன்பாபு (21), சரவணன், பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்தன், கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ் உள்ளிட்ட 10 பேரை ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் அதிரடியாக கைது செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50ம் ஆண்டு நிறைவடைந்தது ஒட்டி ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், எழுத்தாளர் கல்வியாளர் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட இறையன்பு, செவிலிமேடு தேவகி வெட்டிங் கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் வருகை புரிய உள்ளார்.
காமகோட்டி நாயகி கோயில் என்று அழைக்கப்படும் காமாட்சி அம்மன் கோயில் 5-8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் நிறுவப்பட்டு 14ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தல் தமிழகத்திலுள்ள சக்தி தலங்களில் ஒன்றாக உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் காமாஷி சன்னதியில் இந்து வடிவங்களில் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் திவ்ய தேசங்கலில் ஒன்றான வராஹப் பெருமாள் சன்னதியும் உள்ளது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.