Kanchipuram

News April 30, 2024

போக்குவரத்து காவலர்களுக்கு கூலிங் கிளாஸ்

image

கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் ராஜிவ் ஏற்பாட்டில், வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இன்று மோர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பகுதியான மூங்கில் மண்டபம் பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் கூலிங் கிளாஸ் வழங்கினார்.

News April 30, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியர் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில்
இன்று (30.04.2024) காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்து வருகின்றனர்.

News April 30, 2024

காஞ்சி: நீர், மோர் வழங்கிய போக்குவரத்து காவலர்கள்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூங்கில் மண்டபம் போக்குவரத்து சிக்னல் அருகே கோடைக்காலத்தில், வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சிங்கனலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு நீர், மோர் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்களும் நீர், மோர் வாங்கி அருந்தி வருகின்றனர்.

News April 30, 2024

காஞ்சி அருகே திருநங்கை தற்கொலை?

image

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாசிலாமணி என்ற திருநங்கை, நேற்று(ஏப்.29) அதே பகுதியில் உள்ள தைலம் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த பெருநகர் காவல் நிலைய காவலர்கள் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையா அல்லது தற்கொலையா என்ற கோலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 30, 2024

காஞ்சிபுரம்: கண்புரை அறுவை சிகிச்சை முகாம்!  இன்றே கடைசி

image

காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், சங்கர நேத்ராலயா, யங் இந்தியன்ஸ் ஆகியவை இணைந்து, ஓரிக்கை பாரதிதாசன் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக ‘இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்’ நடைபெற்று வருகிறது. இந்த முகாம் இன்று(ஏப்.30) மதியம் 1 மணியுடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு வசதிகள் கொண்ட பேருந்து அறுவை சிகிச்சை செய்யப்படுவதும் நாளையுடன் முடிவடைகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News April 30, 2024

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர தீ!

image

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிப்பட்டு பகுதியின் பின்புறம் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்த 10 ஏக்கர் நிலம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்து வரும் சூழலில், அந்த விளைநிலம் முட்செடிகள் வளர்ந்து காட்டுப் பகுதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் நேற்று(ஏப்.29) மாலை முட்செடிகள் மீது படர்ந்த தீப்பொறி தொடர் காற்று வீச்சின் காரணமாக மலமலவென கடும் காட்டு தீயாக மாறி உள்ளது.

News April 29, 2024

காஞ்சிபுரம் அருகே விபத்து: இருவர் பலி

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் லாரி மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஓட்டுனர் தயாளன் (36) மற்றும் குமார்(50) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

News April 29, 2024

காஞ்சிபுரம் மாணவன் சாதனை

image

துபாய் நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான அத்லெடிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூர் 9-வது வார்டு பொன்னாமணியம்மன் தெருவைச் சேர்ந்த செளந்தர் ராஜன் அவர்களின் மகன் S.கார்த்திக் என்பவர் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மூன்றாம் இடம்  பெற்றுள்ள கார்த்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

News April 29, 2024

காஞ்சிபுரம்: விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுவந்தது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியானது இன்றுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் முதன்மை பாட தாள்கள் திருத்தும் பணி நிறைவுபெற்ற நிலையில் இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவுபெற்றுள்ளது.

error: Content is protected !!