Kanchipuram

News May 4, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

காஞ்சிபுரத்தில் ஆரஞ்சு அலர்ட்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

காஞ்சிபுரம்: ராஜாஜி மார்க்கெட் நாளை செயல்படாது!

image

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே 5 தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினம் கடைகள் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிக அமைப்புகள் அறிவித்துள்ளன. அதன்படி ஓரிகையில் அமைந்துள்ள தற்காலிக ராஜாஜி மார்க்கெட் நாளை(மே 5) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல் இயங்கும்.

News May 4, 2024

காஞ்சிபுரம்: விபத்தில் கணவன்-மனைவி பலி!

image

காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் பகுதியில் நேற்று(மே 3) இரவு 11 மணியளவில் காஞ்சிபுரம் பல்லவர் நகர் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் சீனிவாசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சுளா இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கனரக வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 4, 2024

காஞ்சி சங்கர மட வளாகத்தில் மகா கும்பாபிஷேக விழா

image

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கர ஸ்ரீ அனுக்கை கணபதி ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்திதி ஆகியவற்றுக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நேற்று(மே 3) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த 3 சந்நிதிகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பா பிஷேகத்தையொட்டி காலை பூஜைகள், அனுக்கை விக்னேஸ்வா பூஜையுடன் தொடங்கியது.

News May 3, 2024

வணிகர் சங்க தினத்தை முன்னிட்டு விடுமுறை

image

தமிழகத்தில் வரும் மே 5ஆம் தேதி வணிகர் சங்க மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மாநிலம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், தலைவர், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

News May 3, 2024

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளுர்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜஸ்டின்(20), மோசஸ்(17). இவர்கள் இருவரும் நேற்று(மே 2) மாலை சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற கண்டெயினர் லாரி மீது மோதி ஜஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசஸ் என்பவருக்கு கை கால் முறிவு ஏற்பட்டது.

News May 3, 2024

காஞ்சிபுரம்: இலவச கண் பரிசோதனை முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் அமைந்துள்ள மூங்கில் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (03.05.2024) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 2, 2024

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் அமைந்துள்ள மூங்கில் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (03.05.2024) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவித்துள்ளனர்.

News May 2, 2024

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கீடு

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை பகுதியில் ஆற்றங்கரை அருகாமையில் ஆழ்துளை கிணற்றில் ஊராட்சி நிதியிலிருந்து ரூ.5.80 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளதாக ஒரு புறம் எழுதப்பட்டுள்ள நிலையில் மற்றொருபுறம் 15-ஆவது நிதி குழு ரூ.3.60 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளதாக இருவிதமாக எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

error: Content is protected !!