Kanchipuram

News May 10, 2024

10th RESULT: காஞ்சிபுரத்தில் 87.55% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.05% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.18% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து தினம் தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோடைகாலத்தில் பொதுமக்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உதவியுடன் ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News May 9, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளயம்மன் கோயிலில் நேற்று(மே 8) சித்திரையை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு அங்காளயம்மன் சன்னதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவப்பு சீலை கட்டிக் பெண்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 8, 2024

சட்ட விரோதமாக குடிநீர் குழாய்: கடும் நடவடிக்கை

image

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதியில் உள்ள முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் சட்டவிரோதமாக மின்மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றார். மேலும், கோடை காலத்தில் வறட்சியை தவிர்க்க சிக்கனமாக பயன்படுத்திட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

News May 8, 2024

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வு

image

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 – பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி உள்ளார்.

News May 8, 2024

காஞ்சிபுரம்: பாம்பு கடித்து ஒடிசா இளைஞர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் அடுத்த எறையூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சரோஜ் ஸ்வாயின்(21) வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று(மே 7) இரவு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி ஸவாயின் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News May 7, 2024

காஞ்சிபுரம்: பதக்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு

image

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள், இன்று(மே 7) ஊர் திரும்பினர். அவர்களுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பூங்கா எதிரே உள்ள விளையாட்டரங்கில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!