Kanchipuram

News October 18, 2024

500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில், தீப்பாஞ்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இக்கோயில் வளாகத்தில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மு.அன்பழகன், ந.அப்பாதுரை இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, இதன் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2024

மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மழை குறைந்த நிலையில் இன்று (அக்.18) காலை 6.50 மணி அளவில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடை எடுத்துச் சொல்லுங்க.

News October 18, 2024

மிளகு சாகுபடிகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

image

காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கரும்பு சாகுபடியில் நல்ல விலை இல்லாத காரணத்தினாலும், இடுபொருட்கள் விலை அதிகமாக உள்ளதாலும், தென்னையிலும், வேளாண் சமவெளிப் காடுகளில் மிளகு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மிளகு சாகுபடி செய்ய காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிலுவையில் உள்ளதால், மிளகு சாகுபடிக்கு காலதாமதமின்றி செடிகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

News October 18, 2024

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் பவனி

image

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், ஐப்பசி மாதப்பிறப்பு மற்றும் பௌர்ணமியையொட்டி காமாட்சி அம்மன், சரஸ்வதி தேவியருடன் தங்கத்தேரில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கத்தேர் ஆலயத்தை வலம் வந்த பின்னர், கோயில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

News October 17, 2024

செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து குறைவு

image

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி ஆகும். ஆனால், தற்போது நீர் இருப்பு 13.79 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.317 டி.எம்.சி. தண்ணீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 17, 2024

ஹூண்டாய் தொழிற்சாலை நவீனமயமாகிறது

image

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, 5.40 லட்சம் சதுர அடியில் ஆலை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் தொழிற்சாலையை நவீன மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 19,706 பேர் பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

News October 17, 2024

பகலில் வெயில் உச்சத்தை தொடும்: பிரதீப் ஜான்

image

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பகலில் வெயில் உச்சத்தை தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று (அக்.17) தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தெற்கு ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. இதனால், பெரிய அளவில் பாதிப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

விவசாயிகளுக்கு மானியம்: தோட்டக்கலைத்துறை

image

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை மூலம் நுண்ணுயிர் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் தோட்டக்கலைத்துறை நீர் பாசன சாதனங்களை வழங்கி வருகிறது. வேளாண் பெருமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை அதிகாரிகளை கலந்தாலோசித்து பயன்பெறலாம் என்று அதிகாரிகள் கூறினர். ஷேர் பண்ணுங்க

News October 17, 2024

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது

image

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையை கடந்தது. இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதியில் மேல் தற்போது நிலவி வருவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News October 17, 2024

அவசர காலங்களில் கால்நடை சேவையை பெறலாம்

image

பேரிடர் காலங்களில், ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 குழுக்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 63 குழுக்கள் என 108 கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான அவசர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அவசர கால தேவைகளுக்கு, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை அழைப்பு எண்ணை (1962) தொடர்பு கொண்டு ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை பெறலாம் என கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.