Kanchipuram

News May 15, 2024

அம்மனுக்கு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாங்காடு நகர செயலாளர் பிரேம்சேகர், குன்றத்தூர் ஒன்றிய பாசறை செயலாளர் எம்.பி.பாரத்ராஜ் ஏற்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, வி. சோமசுந்தரம், பா.பெஞ்சமின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் தங்க தேர் இழுத்து வழி பட்டனர்.

News May 14, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

காஞ்சியில் 66,040 மாணவர்கள் பயன்

image

தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் ரூ.28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 66,040 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர். 

News May 14, 2024

காஞ்சிபுரம் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 32ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 81.59% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 72.12 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.19 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT:காஞ்சிபுரம் 86.98% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 81.32% பேரும், மாணவியர் 92.12% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.98% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. காஞ்சி மாவட்டம் 33வது இடத்தை பிடித்துள்ளது.

News May 14, 2024

காஞ்சி டிஐஜி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

image

காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் பொன்னி, மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதே போல், மதுரை டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

News May 13, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் அட்வைஸ்

image

காஞ்சிபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி, ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய அறிவுரை வழங்கியுள்ளார். 

News May 13, 2024

காஞ்சிபுரம்: மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

காஞ்சிபுரத்திற்கு மழை

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!