India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (21.5.24) அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 10 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்ம உற்சவம் இன்று துவங்கிய நிலையில் மே 22 கருட சேவை மற்றும் மே 26 திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில் அன்று காஞ்சிபுரத்தில் புதிய ரயில்வே நிலையம், பழைய ரயில்வே நிலையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மிலிட்டரி ரோடு, ஒலிமுகம்மதுபேட்டை ஆகிய பகுதிகளில் 5 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006-ன்படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்களின் திருமண வயது 21-வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் குழந்தை திருமணம் நடத்தினாலோ அல்லது ஆதரித்தாலோ 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வரும் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணம் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சுப்பேட்டை பகுதிகளில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் 110 கே.வி கொள்ளளவு உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. மின் ஊழியர்களால் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் மின்சார வழங்கப்படும் என மின்சார துறை அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 10 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்ச்சையா நடைபெற்றது. இந்நிலையில் இதில் நடிகையும், ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் உள்ள டைமண்ட் ஜூப்ளி ஹாலில் ஆதிசங்கரர் 2500வது முக்தி தினத்தை முன்னிட்டு 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், +2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கான “என் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று (17.05.2024) நடைபெற்றது. இதில் +2 தேர்வில் 563 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவன் கணேஷ்குமார்-க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.