India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவிலில் நாளை காலை 4 மணிக்கு திருத்தேர் உற்சவ வீதி உலா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும்மாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில், போலி நகையை தங்க நகை என அடகு வைத்து ரூ.2.62 கோடி பெற்றுக்கொண்ட அரக்கோணம் அருகே பல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்படுள்ளனர். மண்டல மேலாளர் ராஜாராம் கொடுத்த புகாரின் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய இராணுவத்தால் அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர்மன் தேர்வு மையத்தின் மூலமாக 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பணி நடத்தவிருப்பதாகவும், இதில் கலந்துகொள்வதற்கு 05.06.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது காஞ்சி காமகோடி பீடம். காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்தன. பல்வேறு கருத்துகலுடன் இருந்தாலும் இந்து சமயத் துறவியான ஆதிசங்கரர் நினைவாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. ஆன்மீக பரப்புரைகளும் கோட்பாடுகளும் பின்பற்றி கற்பிக்கும் கூடமாகவும் இருந்து வருகிறது. பல சங்கராச்சாரியார்கள் இதன் தலைவர்களாக இருந்து பொறுப்பேற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரியில்-2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.22) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் பகுதியில் தூசியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஈஸ்வரன். 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மைதானம் பகுதியில் அடுப்புக்கு விறகு வெட்ட சென்ற போது திடீரென பெய்த கனமழையால் மின்னல் தாக்கி காலில் பலத்த காயமடைந்தார். பின்னர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் வெள்ளியில் செய்யப்பட்ட 13 கிலோ எடை கொண்ட வெள்ளி வில், அம்புகளை காணிக்கையாக வழங்க உள்ளனர். இந்த வெள்ளி வில் அம்புடன் அவர்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வருகை தந்தனர். சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அவற்றை வழங்கினர். இந்த வில் அம்பை மஹாபெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
அருள்மிகு தேவராஜசுவாமி உற்சவத்தை முன்னிட்டு நாளை 22.05.24 கருடசேவை மற்றும் 26.5.2024 இன்று திருத்தேர் வீதி உலா வருவதால் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒலி முகமது பேட்டை, புதிய ரயில் நிலையம், பழைய ரயில் நிலையம்,ஓரிக்கை, மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.