Kanchipuram

News June 1, 2024

11 கடைகளுக்கு ‘சீல்’

image

காஞ்சிபுரம், சோமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில்
சோமங்கலம் போலீஸார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் ஆகியோர் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 11 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News May 31, 2024

நம்மைக் காக்கும் 48 திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

image

சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் /நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 4737 நபர்களுக்கு ரூ.3,80,18,176/- ரூபாய் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News May 31, 2024

ரோஸ் மில்க் கடைகளுக்கு எச்சரிக்கை

image

காஞ்சிபுரம் மாநகரில் கோடை காலம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு பகுதியில் புதியதாக தனியார் ரோஸ் மில்க் அதிகமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பயன்படுத்தப்படும் பால் மற்றும் கிரீம் போன்றவைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல்வேறு கடைகள் உரிமை இல்லாமல், காலாவதி ஆன பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

News May 31, 2024

பத்து நாட்களாக தண்ணீர் வராமல் கிராம மக்கள் அவதி

image

காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே அழிசூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டிராக்டர் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 31, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாதம் பிரம்ம உற்சவத்தை நிறைவு நாளான நேற்று இரவு விடையாற்றி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

News May 30, 2024

டென்சிங்க் நோர்கே தேசிய சாகச விருதுக்கு அழைப்பு

image

 நீர், நிலம், மலை போன்ற சாகசத் துறைகளில் (Adventure Sports) இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், டென்சிங்க் நோர்கே தேசிய சாகச விருது (Tenzing Norgay National Adventure Award) வழங்கப்படுகிறது. இதற்கு http://awards.gov.in  எனற இணையத்தள முகவரியில் ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News May 30, 2024

காஞ்சி: 48 பேருக்கு ரூ.798.31 லட்சம் மானியம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பட்டியலின மக்கள் தொழில் முனைவோர் ஆகிட(அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – AABC) அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் வாயிலாக 48 நபர்களுக்கு ரூ.798.31 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

காஞ்சிபுரம்: மகளிர் உரிமைத் தொகை விவரம்!

image

தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1000 என ஆண்டுக்கு ரூபாய் 12,000 வழங்கப்பட்டு வருகிறது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 1,73,252 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விவரம் அறிவிப்பு

image

தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1000 என ஆண்டுக்கு ரூபாய் 12000 வழங்கப்பட்டு வருகிறது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 1,73,252 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

News May 29, 2024

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு விருது

image

காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்த 5 முதல் 18 வயதுடைய குழந்தைகள் மற்றும் குழந்தைகள் சார்ந்த நபர்களிடமிருந்து விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு https://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!