India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில், ஒமேகா சி.பி.எஸ்.சி. பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயிலும் மாணவிகள், அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கோ-கோ விளையாட்டில் கலந்து கொண்டு 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அளவில் காஞ்சிபுரம் மாணவிகள் வெற்றிபெற்றது மிகப்பெரிய பெருமை ஆகும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை (அக்.19) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காஞ்சிபுரத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, சங்குசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சதாவரம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஐயம்பேட்டை, காந்தி சாலை, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம், புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிக் பாக்ஸிங் பயிற்சிகளை பெற்றுள்ளார். இவர் அக். 6ம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை கம்போடியா நாட்டில் நடைபெற்ற வாக்கோ ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக சார்பில் பங்கேற்றார். இதில் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்வதை மறுத்து வந்த தமிழக தொழிலாளர் துறைக்கு எதிராக, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியு உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நேற்று 34ஆவது வழக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நடைபெற்ற நிலையில், சி.ஐ.டி.யூ. வழக்கு வரும் 22ஆம் தேதி பிற்பகலில் எடுத்துக் கொள்வதாக நமது வழக்கறிஞர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேற்று வெளியிட்ட செய்தியில், “காஞ்சிபுரத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளம் மற்றும் புயல் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளை சமாளிக்க மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும், வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்திருப்பதுடன் வெள்ள கண்காணிப்பு அறையும் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை (அக்.19, 20 தவிர) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் அரசு சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.18) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.