Kanchipuram

News June 12, 2024

காஞ்சியில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது சற்று நிமமமதி பெருமூச்சு விட்டனர்.

News June 12, 2024

காஞ்சி: 687ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதை கண்டித்து, 687ஆவது நாளாக இன்று மத்திய மாநில அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைந்தால் தங்களின் விவசாய நிலங்கள் இலக்க நேரிடும் எனவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவோம் எனவும் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News June 11, 2024

தெரு விளக்கு அமைப்பதில் ஊழல் மேயர் மீது புகார்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 8 பகுதிகள் புதிதாக தெருவிளக்கு அமைக்கும் பணியில் மாநகராட்சி மேயர், கணவன், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் ரூ.5 கோடி லஞ்சம் பெற்று தரமற்ற முறையில் விளக்குகள் போடப்பட்டதாக ஊழல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

News June 11, 2024

காஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தாததால் தினந்தோறும் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

News June 11, 2024

வீடு வீடாக சென்று மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் அடுத்த கலியனூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவ உதவியாளர், ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 11, 2024

காஞ்சிபுரம் அருகே விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு!

image

ககாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சோழவரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(40). இவர் மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று(ஜூன் 10) இவர் ஓட்டி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News June 11, 2024

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற காஞ்சிபுரம் எம்பி

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம் சுமார் 2.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று(ஜூன் 10) சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News June 10, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் ஆட்சியர் மனு பெற்றார்

image

இன்று (10.06.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் தங்களது மனுக்களை வாழ்வாதாரம் கேட்டு விண்ணப்பித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்.

News June 10, 2024

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.06.2024 காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவித்தார்.

News June 10, 2024

காஞ்சி ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் மனு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று (10.06.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி குறைதீர்க்கும் நாள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது .

error: Content is protected !!