India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 23 பேரை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு தொழிற்சங்க தொழிலாளர்கள் இன்று (மார்.7) வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது, ‘பணிக்கு வரத்தயாராக உள்ளேன்’ எனும் கடிதத்துடன் தொழிலாளர்கள் வரத்தொடங்கியுள்ளனர். தொழிற்சாலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மதுராமங்கலம் அருகே விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடியும் கொலை மற்றும் கொலை முயற்சி ஆள் கடத்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு படப்பை குணாவை சுங்குவார்சத்திரம் போலீசாரால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற <
வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரம். இது பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கோட்டையாக மாறியது. தனித்துவமான கட்டிடக்கலை அழகுடன் கூடிய பல அற்புதமான கோவில்களை அதன் புகழ்பெற்ற திராவிட பாரம்பரியத்திற்கு ஒரு செழுமையான சாட்சியத்தை நாம் காணலாம். இப்பகுதி நாட்டிலேயே சிறந்த பட்டுப் புடவைகளின் நன்கு அறியப்பட்ட மையமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 8ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம், தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரத்தில், சிங்காடிவாக்கம் கிராமத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில், பழவேரி கிராமத்திலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. மேலும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் செங்காடு கிராமத்திலும், குன்றத்துார் தாலுகாவில் இக்குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் <
மத்திய, மாநில போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவது தெரியவந்துள்ளது. அதற்காக, 2.38 கோடி ரூபாயில் சிறப்பு புலனாய்வு பிரிவின் 3 யூனிட்டுகளை தொடங்குவதற்கான பணியில், போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க, கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., ஏ.டி.எஸ்., உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.