India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பான் தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணி தலைமையிலான 40 பேர் அண்மையில் தமிழ்நாடு வந்தனர். காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸவரர் கோயிலுக்கு நேற்று (மார்.8) வந்தனர். அப்போது, கோயிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஜப்பானியர்கள் பங்கேற்று யாக குண்டத்தில் பொருட்களை போட்டனர். இந்தப் பகுதி மிகவும் அமைதியான இடமாக இருப்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அவர், “ காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 700 படுக்கை வசதிகளுடன் ரூ.72 கோடியில் தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். 24 மணி நேரமும் காவலாளியுடன், பயோமெட்ரிக் வசதியுடன் அமைய உள்ளது” என்றார். ஷேர் பண்ணுங்க
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், குருவிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). வெல்டிங் கடை நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் (மார்.6) மாலை தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரக்கட்டைகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்தது. உறவினர்கள் அவரை கீழ்பேரமநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.7) உயிரிழந்தார்.
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படை தினவிழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மார்.7) பங்கேற்றார். இதனால், காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை எல்லையான படுநெல்லியில் உள்ள தற்காலிக சோதனைச்சாவடியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறும்பாக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில். வேண்டியது நினைத்து சாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் பதவி உயர்வு, கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. திருக்கோயில் சித்திரை மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பௌர்ணமி விசேஷ பூஜைகள் இவை மிகவும் சிறப்பு. சேர் பண்ணுங்க.
நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த வழக்கறிஞர் செ.அ.ஞானசேகரன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “16 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சிக்காக, இளமைக்காலம் முதல் அர்ப்பணிப்போடு செயலாற்றி உள்ளேன். சமீப காலமாக, கட்சியின் போக்கில் கொள்கைக்கு முரணான காட்சிகள் அரங்கேறி வருவதால் கட்சியிலிருந்து விலகுவதாக” குறிப்பிட்டுள்ளார்.
உத்திரமேரூர் அருகே உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (47). கூலித் தொழிலாளியான இவரை, நேற்று முன்தினம் (மார்.5) உத்திரமேரூர் போலீசார் கருவேப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் சடலமாக மீட்டனர். இந்த வழக்கில், முன்விரோதம் காரணமாக பழனியை கொலை செய்த, கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்த அகத்தியன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை உத்திரமேரூர் போலீசார் நேற்று (மார்.6) கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.