India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் ஆகியோரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 3 மற்றும் 4 ஆம் தேதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வி.என். வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தோழமை கட்சிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஶ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வருகை புரிந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “பொருளாதரத்தில் 11வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு வந்துள்ளது; இதுதான் பாஜகவின் வளர்ச்சி; சொத்துவரி, பால் வரி என அனைத்தையும் அதிகரித்துதான் திமுகவின் சாதனை; பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவில்லை என பேசி வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செவிலிமேடு அருகே, காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வத்திற்கு வாக்களிக்கும்படி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நேற்று(மார்ச் 28) பிரச்சாரம் செய்தார். அப்போது, பொதுமக்களை கவரும் வகையில் சாலை ஓரம் இருந்த தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர்களுக்கு முட்டை மற்றும் தோசை ஊற்றி கொடுத்து வாக்கு கேட்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது தொடர்ந்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பேச்சு வேட்பாளர்கள் மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் மீதம் உள்ள வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாக காஞ்சிபுரம் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி அறிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று காலை கண்டெய்னர் லாரியின் பின்புறமாக நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை கலெக்டர் கலைசெல்வி மோகன் நேற்று(மார்ச் 27) வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி பொது பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்ரி: 75488 81882;
காஞ்சிபுரம் தொகுதி காவல் பார்வையாளர் பாரத் ரெட்டி: 63855 15308;
காஞ்சிபுரம் தொகுதி செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ்: 72005 – 55395.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
இன்று (27.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விருந்தினர் மாளிகையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் பூபேந்திர எஸ்.சௌத்ரி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்களுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.