Kanchipuram

News April 6, 2024

கணக்கில் முரண்பாடு ஏற்பட்டதாக ரூ.25 லட்சம் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி காஞ்புரம் மாவட்டம் வாலாஜாபாத் ரவுண்டானா அருகே, ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சகுந்தலா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று(ஏப்.5) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த நகைக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, பணத்திற்கும் கணக்கிற்கு முரண்பாடு ஏற்பட்டதாக ரூ.25 லட்சத்து 6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

News April 5, 2024

காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலால் வெறிச்செயல்

image

குன்றத்தூர் அருகே மாங்காடு பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த புஜகர் (38) மற்றும் சோனியா(30) வசித்து வரும் நிலையில் அதே பகுதியில் உள்ள மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பர்மனுக்கு (40)  சோனியா பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது.இதற்கு இடையூறாக இருந்த கணவன் புஜகரை கொலை செய்து விட்டு நாடகமாடி வந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News April 5, 2024

ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி விழும் நிகழ்வு

image

உத்திரமேரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர் கால துர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒரு முறை மூலவர் துர்க்கை அம்மன் மீது முழுமையாக சூரிய ஒளி கதிர் பிரகாசமாக படும் அரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

ஊட்டியான காஞ்சிபுரம்!

image

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் இன்று(ஏப்.5) அதிகாலை 5.30 மணி அளவில், ஊட்டி போன்று இதமான குளிர் மற்றும் மூடுபனி அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சாலை சரியாக தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பொறுமையாக சென்றனர். வெயில் வாட்டி வதைக்கும் இந்நேரத்தில், இந்த பனிமூட்டம் அளிக்கும் குளிர்ச்சியால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 4, 2024

நம்பர் 1 இடம்.. கலக்கும் காஞ்சிபுரம்

image

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 40% தமிழ்நாட்டில் சென்னை அருகே அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் இருந்து வெவ்வேறு நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டவை. ஏப்ரல் 2023 மற்றும் ஜனவரி 2024 க்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாடு 7.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

News April 4, 2024

பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

காஞ்சி: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

image

காஞ்சிபுரம் அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் நேற்று(ஏப்.3) போலீசார் கைது செய்துள்ளனர். செவிலிமேடு அருகே பிரபல தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்ப்பவர் காமேஷ்(42). இவர் மாணவர் ஒருவருக்கு போனில் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரில் பேரில் காஞ்சி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News April 3, 2024

விளையாட்டு வீராங்களையை வாழ்த்திய கலெக்டர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கிளேரா பீட்டர் கடந்த வாரம் நேபாளத்தில் நடைபெற்ற பேரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வருகை தந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News April 3, 2024

மாட்டு வண்டியில் தேர்தல் பிரச்சாரம் 

image

காஞ்சிபுரம் அடுத்த மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிராமம் முழுவதும் மாட்டு வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

error: Content is protected !!