Kanchipuram

News April 9, 2024

காஞ்சி: போலி நகை அடகு வைத்த மூவர் கைது

image

காஞ்சி மாநகராட்சி உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், போலியாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை அடகு வைத்து ரூ.1.21 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை, உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் மற்றும் நெடும்புலி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், காஞ்சியை சேர்ந்த சுரேந்திர குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News April 9, 2024

காஞ்சி: சோமவார அமாவாசையை ஒட்டி நாக வழிபாடு

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள ஆலமர நாகரை சோமவார அமாவாசை ஒட்டி நேற்று(ஏப்.8) மாலை ஏராளமான பெண்கள் ஒன்று கூடி வழிபட்டனர். தோஷம் நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் நாக தேவதைக்கு அபிஷேகம் செய்து 108 முறை வலம் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

News April 8, 2024

கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது 

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய ரயில்வே நிலையம் மேம்பாலம் அருகே பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டி தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் (25) என்பவர் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி சிறுபொட்டலமாக செய்து விற்பனை செய்து வந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை போலீசார் தினேஷ் கைது செய்து சிறையில் அடைத்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 

News April 8, 2024

காஞ்சிபுரம் அருகே தீ விபத்து

image

குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் கிராமம் மேட்டூர் அண்ணா நகரில் எஸ் பி பில்டர்ஸ் என்ற பெயரில் புன்னாராவ் என்பவருக்கு சொந்தமான தார் பிளான்ட் இயங்கி வருகிறது. இந்த தார் பிளான்டில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் தார் பிளாண்ட் முழுவதும் தீ மளமளவென பரவி கரும்புகைகள் எழும்பியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சோமங்கலம் போலீசார் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News April 8, 2024

ஸ்ரீபெரும்புதூர்: துப்பாக்கி ஏந்தி வீடு வீடாக..!

image

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று(ஏப்.8) ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியை, 5 பகுதிகளாக பிரித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டியுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களிடம் தபால் வாக்கு பதிவில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 8, 2024

காஞ்சிபுரம்: தபால் ஓட்டு பெறும் பணி இன்று தொடக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.8) முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட 1039 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 612 பேர் என, மொத்தம் 1651 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்குகளை பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News April 7, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையா..?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

ஸ்ரீபெரும்புதூர்: தாயை தாக்கிய அண்ணன் கொலை!

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே மணணூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்(36), சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 12 வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.5), தாய் ரெஜினாவை மது போதையில் தாக்கியுள்ளார். இது குறித்து பாலசந்தரின் சகோதரர் மோகனரங்கனுக்கு தெரிய வரவே கட்டையால் தாக்கியதில் பாலசந்தர் உயிரிழந்தார். போலீசார் மோகனை கைது செய்தனர்.

News April 7, 2024

காஞ்சிபுரம்: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

காஞ்சியில் களமிறங்கிய சிறப்பு படை

image

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அறக்கட்டளை கீழ் செயல்படும் பள்ளி உள்ளது. சமீபத்தில் இப்பள்ளியில் ரவுடிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இது குறித்து விசாரித்த போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வழக்கும் பதிந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட சிறப்பு படை களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!