India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் மாநகரில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் துவங்க உள்ள நிலையில், தபால் ஓட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கான தபால் ஓட்டு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் 814 நபர்கள் தங்கள் வாக்குகளை தபால் முறையில் பதிவு செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் துவங்க உள்ள நிலையில், தபால் ஓட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கான தபால் ஓட்டு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் 814 நபர்கள் தங்கள் வாக்குகளை தபால் முறையில் பதிவு செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 627 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திரா, மாவட்ட ஆட்சியர் உடன் தேர்தல் புறக்கணிப்பை கைவிட கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நாங்கள், வாக்களித்தால் என்ன பயன் என இருக்கு என்றனர்.
காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய ஸ்தலமான குமரகோட்டத்தில் இன்று மாலை 7 மணி அளவில் கிருத்திகையை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானை சமேதமாக மேக் இராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கிழக்கு ராஜவீதி, நெல்லுக்கார தெரு வழியாக வீதி உலா வந்து மக்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கினார். முருகரை தரிசிக்க பக்தர்கள் பெரும் திரளாக வருகை தந்து வணங்கினார்கள்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புது ரயில்வே சாலையில் வழியாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது சாலை ஓரம் பானி பூரி கடையில் பொது மக்களுக்கு பானி பூரி போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் அம்மன் குளம் அருகே உள்ள அண்ணா பூங்காவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோர வடை கடையில் வடை போட்டு கொடுத்து நூதன முறையில் உதய சூரியன் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களை உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பாலாற்று கரையோரம் வட்டாட்சியர் அலுவலருடன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் போலீசார உதவி உடன் பந்தல் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் மாணவியர்கள் கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Sorry, no posts matched your criteria.