Kanchipuram

News June 6, 2024

தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரை

image

வரும் 09.06.2024 அன்று சுபமுகூர்த்த நேரம் என்பதால் அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிமைப்பணிகள் தேர்வு IV–னை எழுதும் தேர்வர்கள் முன்பே தேர்வறைக்கு வருவதற்கான நேரத்தை திட்டமிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

காஞ்சிபுரம்: டெபாசிட் இழந்த 9 வேட்பாளர்கள்!

image

காஞ்சிபுரம் மக்களவைத்(தனி) தொகுதியில், திமுக வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் 2 ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் உட்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

காலை உணவுத் திட்டம் – ஆட்சியர் தகவல்

image

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள 527 பள்ளிகளில் 34,233 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

News June 5, 2024

காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு- 7,58,611 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பிரேம் குமார்- 2,71,582 வாக்குகள்
*தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால்- 2,10,222 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன்- 1,40,201 வாக்குகள்

News June 5, 2024

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

image

2024ஆம் நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட க.செல்வம்
2,21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் இல்லத்திற்கு சென்று அவர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: திமுக அமோக வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 7,லட்சத்து 11ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 256538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் டிஆர் பாலு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

காஞ்சிபுரம் திமுக வெற்றி

image

காஞ்சிபுரம் (தனித்)தொகுதி (செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்தரமேரூர், காஞ்சிபுரம்)
இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக 582978 வாக்குகளும், அதிமுக 362291வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 109858 வாக்குகளும் ,பாமக 163792 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் க.செல்வம் 219937 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

News June 4, 2024

காஞ்சி:நோட்டா வாக்கு 10 ஆயிரம் தாண்டியது

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை 14 சுற்று முடிந்த நிலையில் நோட்டா வாக்கு 10276 ஒட்டு கடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக முறைப்படி ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் மக்கள் அதிக அளவில் நோட்டா வாக்கு பத்தாயிரத்தை கடந்தது. வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர் கூறுகிறார்கள்.

error: Content is protected !!