Kanchipuram

News June 7, 2024

காஞ்சிபுரம் மாவட்ட மழையின் நிலவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மழையின் அளவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் – 33.4 மி.மீ,
உத்திரமேரூர் – 13.0 மி.மீ, வாலாஜாபாத் – 80.0 மி.மீ, ஶ்ரீபெரும்புதூர் – 29.0 மி.மீ, குன்றத்தூர் – 22.2 மி.மீ பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 200.26 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

News June 7, 2024

காஞ்சிபுரம்: மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி பலி!

image

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் பகுதி வசிக்கும் அப்பாதுரை மகன் இளங்கோ(41). இவர் நேற்று(ஜூன் 6) இரவு வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றபோது மின்னல் தாக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இளங்கோவை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றநிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 7, 2024

காஞ்சி: மூட்டை மூட்டையாக குப்பைகளை எரிப்பதால் அவதி

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மண்மங்கலம் அடுத்த முடிச்சூர் செல்லும் சாலையில் சிலர் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொட்டி அங்கே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினந்தோறும் சுவாச பிரச்னையை சந்தித்து வருகின்றனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

News June 6, 2024

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 08.06.2024 அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தோட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் பெருங்கோழி, வாலாஜாபாத் வட்டத்தில் நாயக்கன்குப்பம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிசேத்துப்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

காஞ்சிபுரத்தில் 9 செ.மீ மழைப்பதிவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம் ARGயில் 9 செ.மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 8 செ.மீட்டரும், குன்றத்தூரில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News June 6, 2024

தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரை

image

வரும் 09.06.2024 அன்று சுபமுகூர்த்த நேரம் என்பதால் அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிமைப்பணிகள் தேர்வு IV–னை எழுதும் தேர்வர்கள் முன்பே தேர்வறைக்கு வருவதற்கான நேரத்தை திட்டமிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

காஞ்சிபுரம்: டெபாசிட் இழந்த 9 வேட்பாளர்கள்!

image

காஞ்சிபுரம் மக்களவைத்(தனி) தொகுதியில், திமுக வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் 2 ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் உட்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

காலை உணவுத் திட்டம் – ஆட்சியர் தகவல்

image

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள 527 பள்ளிகளில் 34,233 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

News June 5, 2024

காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

error: Content is protected !!