India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டது. அங்குள்ள 13 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில், ரொக்கமாக ரூ.38,69,218 இருந்தது. மேலும், தங்கம் 84.730 கிராமும், வெள்ளி 207.140 கிராமும் இருந்ததாக, கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.
ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்த்த சந்தன், சிப்புன் 2 பேர் உள்பட, செல்போன் கடை உரிமையாளர்கள் மகேஷ், ராம், மகேஷ் 3 பேரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட 15 செல்போன்களையும் கைப்பற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவ/மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் அடங்கிய கல்வி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வேளாண்மைத் துறை மூலமாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து, வேளாண்மை துறை இணை இயக்குநர் உள்ளிட்ட வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை, தோட்டக்கலை ஆகிய துறை அலுவலர்களுடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆலோசனை நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,870 கிலோ ரேஷன் அரிசி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தாயார்குளம் அண்ணா பூங்கா அருகில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஒரு வாகனத்தில் 2,870 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததும், அரிசி கடத்தப்பட்டதையும் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது சற்று நிமமமதி பெருமூச்சு விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதை கண்டித்து, 687ஆவது நாளாக இன்று மத்திய மாநில அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைந்தால் தங்களின் விவசாய நிலங்கள் இலக்க நேரிடும் எனவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவோம் எனவும் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 8 பகுதிகள் புதிதாக தெருவிளக்கு அமைக்கும் பணியில் மாநகராட்சி மேயர், கணவன், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் ரூ.5 கோடி லஞ்சம் பெற்று தரமற்ற முறையில் விளக்குகள் போடப்பட்டதாக ஊழல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தாததால் தினந்தோறும் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.