India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு நில எடுப்புக்கு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் அமைக்க உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்துக்கு நிலமெடுப்பு கருத்துகேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தால் அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்விற்கு 08.7.2024 முதல் 28.7.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சி: சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் பொருட்டு 24-25ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக, நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபரை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மணிகண்டன், பகவதி, விக்கி உள்ளிட்ட 6 பேர், சின்னையன் என்ற உதயநிதியை கொடூரமாக தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தாய், தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சியில் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.06.2024 காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.06.2024 காலை 10.30 மணிக்கு மாற்றம் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டது. அங்குள்ள 13 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில், ரொக்கமாக ரூ.38,69,218 இருந்தது. மேலும், தங்கம் 84.730 கிராமும், வெள்ளி 207.140 கிராமும் இருந்ததாக, கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.
ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்த்த சந்தன், சிப்புன் 2 பேர் உள்பட, செல்போன் கடை உரிமையாளர்கள் மகேஷ், ராம், மகேஷ் 3 பேரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட 15 செல்போன்களையும் கைப்பற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.