Kanchipuram

News March 22, 2024

ஸ்ரீபெரும்புதூர் த.மா.கா வேட்பாளர் அறிவிப்பு

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி(த.மா.கா) வேட்பாளராக வி.என்.வேணுகோபால் இன்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

News March 22, 2024

காஞ்சி பாமக வேட்பாளர்?

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காஞ்சி தவிர 9 தொகுதிகளுக்கு மட்டும் பாமக இன்று(மார்ச் 22) வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

News March 22, 2024

காஞ்சிபுரம்: வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் மார்ச் 24ம் தேதி பயிற்சி அளிக்க இருப்பதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 21, 2024

காஞ்சிபுரம்: ஓபிஎஸ் போட்டியிடுவது மகிழ்ச்சி

image

காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மரியாதை நிமித்தமாக ஸ்ரீமடத்தில் சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என காஞ்சிபுரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

News March 21, 2024

காஞ்சிபுரம்: புகார் எண் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் 7200555395 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். ஶ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 9940353325 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம். மேலும் தாம்பரத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரடியாகவே புகார் தெரிவிக்கலாம் என தொகுதிகள் தேர்தல் செலவினங்கள் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

காஞ்சிபுரம்: கட்டுப்பாட்டு அறை அலுவலர் நியமனம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3வது தளத்தில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் திருப்பெரும்புதூர் சந்தோஷ் சரண், காஞ்சிபுரம் மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் காஞ்சிபுரம் பி.பாலமுரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

News March 21, 2024

காஞ்சிபுரம்: கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் (திருப்பெரும்புதூர்) சந்தோஷ் சரண் (காஞ்சிபுரம்) மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் (காஞ்சிபுரம்) பாலமுரளிதரன் ஆகியோர் தலைமையில் செலவின கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

News March 21, 2024

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் இவர்தான்!

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பிரேம்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

காஞ்சிபுரம்: முதியோர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

காஞ்சிபுரம் அருகே வெடிகுண்டு..?

image

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிற்பகல் 12:00 மணி அளவில் மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்தது. இந்நிலையில் உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!