India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து ஜூன்.22 அன்று (சனிக்கிழமை) காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
காஞ்சிபுரம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காஞ்சி குடில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தனது 120 ஆண்டுகால பழமையால் பெருமிதம் கொள்கிறது. காஞ்சி எஸ்.வி.என் பிள்ளை தெருவில் உள்ள இதில் வீட்டு உபகரணங்கள், ஆடைகள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் என பிற அன்றாட உபயோகப் பொருட்களை காணலாம். காஞ்சி குடில் ஒரு சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல், கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், வருவாய் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக ராஜினாமா முடிவுடன் போர்க்கொடி துாக்கியுள்ள தி.மு.க., கவுன்சிலர்களுடன், அமைச்சர் நேரு சமாதான பேச்சு நடத்தவுள்ளார். மேயர் மகாலட்சுமியின் கணவர், மாநகராட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், 33 கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், மேயர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்ததால், இன்று 2ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்து 650 கனஅடியாக அதிகரித்து, நீா்மட்ட உயரம் 15.72 அடியாக உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காஞ்சிபுரம், சங்கரமடம் அருகே உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணியை அவரது கணவர் நேற்று அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லிராணி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாமில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது நல்லது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில், “அரசியல் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில், இது ஜனநாயக நாடு. எனக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். ஏனெனில், அந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது” எனக் கூறினார்.
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லிராணி – மேகநாதன் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் டில்லிராணியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவரது கணவர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவான மேகநாதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் டெல்லி ராணி என்ற பெண் காவலரை கணவர் மேகநாதன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பேசிக் கொண்டிருந்தபோது கையில் இருந்த பட்டா கத்தியால் பெண் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.