India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செவிலிமேடு அருகே, காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வத்திற்கு வாக்களிக்கும்படி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நேற்று(மார்ச் 28) பிரச்சாரம் செய்தார். அப்போது, பொதுமக்களை கவரும் வகையில் சாலை ஓரம் இருந்த தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர்களுக்கு முட்டை மற்றும் தோசை ஊற்றி கொடுத்து வாக்கு கேட்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது தொடர்ந்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பேச்சு வேட்பாளர்கள் மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் மீதம் உள்ள வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாக காஞ்சிபுரம் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி அறிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று காலை கண்டெய்னர் லாரியின் பின்புறமாக நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை கலெக்டர் கலைசெல்வி மோகன் நேற்று(மார்ச் 27) வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி பொது பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்ரி: 75488 81882;
காஞ்சிபுரம் தொகுதி காவல் பார்வையாளர் பாரத் ரெட்டி: 63855 15308;
காஞ்சிபுரம் தொகுதி செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ்: 72005 – 55395.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
இன்று (27.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விருந்தினர் மாளிகையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் பூபேந்திர எஸ்.சௌத்ரி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்களுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெங்கடு கிராமம், பாலாறு படுகையில் பூமியில் புதைத்து வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த கலையரசி(50) கைதாகி சிறையில் உள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து கலையரசி மீது பல புகார்கள் நிலுவை உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பரிந்துரையின் பேரில், கலைச்செல்வியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(44). இவரது குடிசை வீடு நேற்று(மார்ச் 26) மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில், வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 கிராம் தங்கம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயில் குளத்தில், நேற்று(மார்ச் 26) 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.