Kanchipuram

News March 17, 2024

காஞ்சிபுரத்தில் அமலுக்கு வந்தாச்சு!

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 16, 2024

காஞ்சி: அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

image

இன்று(16.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு துணை வாக்குச் சாவடிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா உடன் இருந்தனர்.

News March 16, 2024

காஞ்சிபுரம்: 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024)  விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

News March 16, 2024

அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் முகாம்

image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் நாளை (மார்ச் 17) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஷ்யாம் குமார், முதியோர் மருத்துவம் மற்றும் பொது மருத்துவர் பிரியங்கா ராணா பத்கிரி ஆகியோர் வரவுள்ளதால் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் குணால் பட்டேல் தெரிவித்தார்.

error: Content is protected !!