India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 272.530 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் 94440-42322, 94984-10581, 82489-86885 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாற்றுதிறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை 2023-2024 (31.3.2024 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களை, 30.06.2024 வரை 3 மாத காலத்திற்கு பயணம் நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த 223 கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெற, பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த 223 கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெற, பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. இதில் 6 பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வேதியியல், தாவரவியல், வணிகவியல்) பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டறங்கில் விவசாயிகள் நலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் 5 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் உதடு சிதைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரத்திலும், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து அரசு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உத்திரமேரூர், குன்றத்தூர், திருப்பெரும்புதூர் போன்ற முக்கிய நகரங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி , போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வெளியே செல்பவர்கள் குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை 2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.யோகஜோதி உள்ளார். இதில் பருவமழையை எதிர்கொள்ள தாயர் குறித்து கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை 2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.யோகஜோதி உள்ளார். இதில் பருவமழையை எதிர்கொள்ள தாயர் குறித்து கூட்டம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.