Kanchipuram

News July 2, 2024

தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் நல வாரியம்

image

காஞ்சியில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில் பதிவு செய்யும் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. நெல் பயிர் 223 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை எக்டர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.1,704 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஒரகடம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 15.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும். அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 548 மனுக்கள் ஏற்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக உணவாக பெரும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உலகத்தில் நடைபெறும் அந்த வகையில் இந்த வாரம் என்ற ஒரே நாளில் 548 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை மீது ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

News July 1, 2024

காஞ்சிபுரம் மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

image

காஞ்சி: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் நடத்த கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி வரும் ஜூலை 25ஆம் தேதி அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் காஞ்சி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

தேர்தல் செலவினங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(1.7.24) காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ், இ.வ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

News July 1, 2024

காஞ்சிபுரம்: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

காஞ்சிபுரத்தில் நாளை முதல் அமல்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து குற்றங்களை தடுக்கும் வகையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அதிநவீன கேரமக்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்படுகிறது. அதன் முதல்கட்டமாக, மாகரல், உத்திரமேரூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்கப்பட உள்ளன. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

News June 29, 2024

குன்றத்துாரில் தெய்வ சேக்கிழார் விழா

image

குன்றத்துார் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை சார்பில் இன்று மாலை தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பட்டிமன்ற பேச்சாளர் பர்வின் சுல்தானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News June 29, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய தனி வட்டாட்சியர் சத்யா – காஞ்சிபுரம் வட்டாட்சியராகவும், உத்திரமேரூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கருணாகரன் வாலாஜாபாத் வட்டாட்சியராகவும், வாலாஜாபாத் வட்டாச்சாரியாக பணிபுரிந்த சதீஷ் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியராகவும், வாலாஜாபாத் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய மலர்விழி குன்றத்தூர் வட்டாட்சியராகவும் மாற்றம் செய்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!