Kanchipuram

News July 6, 2024

காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News July 5, 2024

காஞ்சிபுரம் மேயரும் ராஜினாமாவா?

image

காஞ்சியில் மேயராக மகாலட்சுமி என்பவர் இருக்கிறார். இங்கு மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் தொடங்கியதால், சில நாட்களுக்கு முன் மேயரை மாற்றக்கோரி கொத்தாக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தனர். இதுகுறித்து சீனியர் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியும், மேயர் எதிர்ப்பை கவுன்சிலர்கள் பின்வாங்கவில்லை. கோவை, நெல்லையை தொடர்ந்து காஞ்சி மேயரும் ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

News July 5, 2024

காஞ்சியில் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை

image

காஞ்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்காவல் கிராமம் (செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்குகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாதந்தோறும் ரூ.400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

வாகனங்களை பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் 13, மூன்று சக்கர வாகனம் 1 மற்றும் நான்கு சக்கர வாகனம் 1 ஆக மொத்தம் 15 வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு, அலுவலகத்தில் வரும் 9ஆம் டோக்கன் பெற்று வரும் 15ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News July 4, 2024

மண் இலவசம்; ஆட்சியர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் நீர்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் / களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இதற்கான அனுமதியை பெற சம்மந்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை அணுக கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

காஞ்சிபுரம்: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று(ஜூலை 3) வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

News July 2, 2024

பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க திட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோப்புகள்,பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

மருத்துவ காப்பீடு பெற ஆட்சியர் அறிவிப்பு 

image

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 – 55 வயது வரை உள்ளவர்கள் அயலக தமிழர்கள்,வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://nrtamils.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

News July 2, 2024

தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் நல வாரியம்

image

காஞ்சியில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில் பதிவு செய்யும் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. நெல் பயிர் 223 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை எக்டர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.1,704 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!