India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் 11.07.2024 முதல் 22.08.2024 வரை 256 கிராம ஊராட்சிகளில் 54 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தை 11.07.2024 அன்று முதலமைச்சர் தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, குன்றத்தூர் வட்டம் கோவூர் ஊராட்சியில் தனலட்சுமி மஹாலில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் முகாமை தொடங்கி வைக்கிறார் என மாவட்ட ஆட்சியர் தெரவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 13.07.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் காரை, உத்திரமேரூர் வட்டத்தில் காவித்தண்டலம் , வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் பிச்சிவாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் பூந்தண்டலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 காலிப்பணியிடங்களும், வாலாஜாபாத் ஒன்றியத்தில்13 காலிப்பணியிடங்களும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 11 காலிப்பணியிடங்களும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 8 காலிப்பணியிடங்களும், குன்றத்துார் ஒன்றியத்தில் 5 காலிப்பணியிடங்களும் உள்ளன என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர வேண்டும் என 33 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆணையர் தெரிவித்த காரணங்கள் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்க்கும் நோக்கிலேயே உள்ளதால், ஆணையரை மாற்றம் செய்து புதிய ஆணையரை கொண்டு தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2ஆவது முறையாக கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.
ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 15.07.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா நடைபெற உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன . தேர்வுக்கான தகுதிகள் மற்றும் பிற விவரங்களுக்கு <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில், 3 பட்டதாரி ஆசிரியர்கள், 23 இளநிலை ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. காலிப் பணியிடங்கள் பற்றிய விவரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என்றும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.